தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். பாகுபலி1-2 ஆகிய படங்களுக்குப் பின் இவரது மார்க்கெட் உயர்ந்தது, இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புராஜெக்ட் கே ‘ படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.