தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் உள்பட 5 பேர் போட்டி

புதன், 1 மார்ச் 2017 (20:45 IST)
பரபரப்பான சூழ்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அன்று மாலையே பதிவு செய்யப்படும் வாக்குகள் எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.




இந்த தேர்தலில் விஷால் போட்டியிட தடையில்லை என்று நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு நான்குமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் அவர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.

இதன்படி தலைவர் பதவிக்கு டி.சிவா, ராதாகிருஷ்ணன், விஷால் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர். நடிகர் சங்கத்தை சரத்குமார், ராதாரவியிடம் இருந்து கைப்பற்றியது போல தயாரிப்பாளர் சங்கத்தையும் விஷால் தலைமையிலான இளைஞர் பட்டாளம் கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்