அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

Siva

திங்கள், 17 ஜூன் 2024 (15:34 IST)
அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி 6 கோடி ரூபாய் கேட்டு நடிகை ஒருவர் தன்னை மிரட்டியதாக இயக்குனர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடித்த ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்தவர் நடிகை திகங்கனா. தற்போது  இவர் ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் இந்த வெப் தொடர் தயாராகி இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் வியாபாரமாகவில்லை.

இந்த நிலையில் இந்த படத்தை அக்ஷய் குமாரை வைத்து விளம்பரம் செய்து தருகிறேன் என்றும் அதற்காக தனக்கு 6 கோடி தர வேண்டும் என்றும் தயாரிப்பாளரிடம் கேட்டதாகவும் ஒரு கட்டத்தில் அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தயாரிப்பாளர் ஹரிசங்கர் என்பவர் இது குறித்து குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டை திகங்கனா  மறுத்துள்ளார். தான் பணம் கேட்டு மிரட்டியதாக மனிஷ் கூறியது பொய் என்றும் அவர் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப் போகிறேன் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்