தென் கொரியாவில் நடக்கும் பிரியங்கா மோகனின் புதிய பட ஷூட்டிங்… இயக்குனர் யார் தெரியுமா?

vinoth

புதன், 7 மே 2025 (11:31 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் பிரியங்கா மோகன். அந்த படத்தின் வெற்றிக்கு அவரின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் பிரதர் ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதனால் அவருக்கும் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் தற்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ‘நித்தம் ஒரு வானம்’ என்ற படத்தை இயக்கிய ரா கார்த்தி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்கொரியாவில் நடத்தப்பட்டுள்ளதாம். மொத்த ஷூட்டிங்கும் விரைவில் நிறைவடையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்