ப்ரியங்கா சோப்ராவின் சுயசரிதை புத்தகம்! – Unfinished வெளியீடு!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (13:56 IST)
இந்திய சினிமாவிலிருந்து ஹாலிவுட் வரை பிரபலமான ப்ரியங்கா சோப்ரா தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் மட்டும் நடித்துள்ளார். தொடர்ந்து குவாண்டிகோ உள்ளிட்ட ஹாலிவுட் தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ப்ரியங்கா சோப்ரா பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனாஸை மணம் முடித்தார். நிக் ஜோனாஸ் ப்ரியங்கா சோப்ராவை விட மிகவும் வயது குறைந்தவர் என்பது அந்த சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து Unfinished என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் திரையுலகில் நிற வேற்றுமையால் சந்தித்த சவால்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்