தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இதையடுத்து அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் எல்லை மீறி “உங்கள் பிரா சைஸ் என்ன?” என்று கேட்டிருந்தார். அவரின் கேள்விக்கு “நான் 34 டி சைஸ் அணிகிறேன் சகோதரா. நான் என்னுடைய மார்பகங்களை ஒன்றும் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் அவை உள்ளன. ஒருவேளை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் அவர்களின் டி ஷர்ட்களை உற்றுநோக்கி பார்த்துக்கொள்ளலாம். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.