பாரதி கண்ணம்மா சீரியலில் திடீர் மாற்றம்… முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை விலகல்?

புதன், 13 ஏப்ரல் 2022 (16:22 IST)
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஃபரினா விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் கடந்த ஆண்டு நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அந்த தொடரின் நாயகி கண்ணம்மா தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதால் அவரிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வது போல ஒரு சீக்வன்ஸ் இடம்பெற்றிருந்தது. அதில் கண்ணம்மா நடந்து செல்வது போன்ற காட்சிகள் ஒரு வாரத்துக்கும் மேல் ஒளிபரப்பப் படுவதால் மீம்ஸ்கள் பகிரப்பட்டன.

அதன் பின்னர் இப்போது கண்ணம்மாவும் பாரதியும் பிரிந்து வாழ்கின்றனர். அவர்களின் பிரிவுக்குக் காரணமாக இருந்து வில்லியாக செயல்பட்டு வருகிறார் வெண்பா. இந்த வெண்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைக் குவித்து வருபவர் நடிகை பரினா. சமீபத்தில் இவருக்கு பிரசவம் ஆனதை அடுத்து அவர் இந்த சீரியலில் இருந்து விலகி, குழந்தை பிறந்ததும் மீண்டும் வந்தார். இந்நிலையில் தற்போது அவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், சமூகவலைதளங்களில் இதுபற்றி அதிகமாக செய்திகள் பரவி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்