ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

வியாழன், 31 டிசம்பர் 2020 (11:35 IST)
ராகவா லாரன்ஸ் இயக்கிய ’லட்சுமி’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ’ருத்ரன்’ என்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் ஒரு திகில் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 3ஆம் வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் ’ருத்ரன்’ திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பதும் அது மட்டுமன்றி ப்ரியா பவானி சங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் முறையாக ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானிசங்கர் இணையும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்