பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற எனக்கு அவன் வேண்டும்: பிரியா ஆனந்த்!!
வெள்ளி, 21 ஜூலை 2017 (16:32 IST)
ப்ரியா ஆனந்த் நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து வருகின்றனர். அப்போது ஒரு நிகழ்ச்சியில் ப்ரியா ஆனந்திடம் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு ப்ரியா ஆனந்த பின்வருமாரு கூறினார், என்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது. போன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. ஆனால், என் நாய்க்குட்டி ஒன்று உள்ளது, அவனை என்னுடன் அனுமதித்தால் வருவேன் என கூறியுள்ளார்.