பிரபாஸின் ‘சலார்’ படத்தில் பிரித்விராஜ்: அசத்தலான போஸ்டர்!

ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (12:35 IST)
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிருத்திவிராஜ் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக அறிவித்துள்ளதோடு, புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் 
 
இன்று தனது 40வது பிறந்தநாளை பிருத்விராஜ் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பிரித்விராஜ் இந்த பாலத்தில் வரதராஜ மன்னார் என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த போஸ்ட் தற்போது விறுவிறுப்பாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியுள்ளார். பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது



Edited by Siva\kk
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்