தள்ளிப் போகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ்!

vinoth

வெள்ளி, 24 மே 2024 (10:20 IST)
மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’  நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் கதை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், 150 கோடி ரூபாய் வசூலை ஒட்டுமொத்தமாக ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் மே மாதம் 26 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் மேலும் தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்