பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமீபத்தில் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் மெர்கல் அறிவித்திருந்தனர். மத்திய லண்டனில் நடைபெற்ற, தென் ஆப்ரிக்காவில் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனத்திற்காக நிதி சேகரிக்கும் நிகழ்ச்சியில் பேசிய ஹாரி, "நீங்கள் இதுவரை எங்கோ கேட்டோ அல்லது படித்தோதான் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டிருப்பீர்கள்; இப்போது உண்மையை நான் கூற நிங்கள் கேட்க விரும்புகிறேன். இதை நான் இளவரசராக அல்ல ஹாரியாக சொல்ல விரும்புகிறேன்," என தனது கூறி அதிர்வுகளைக் கிளப்பினார்.
இப்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடி பெயர்ந்துள்ள ஹாரி நெட்பிளிக்ஸோடு இணைந்து சமூகப் பிரச்சனைகளுக்கு எதிரான ஆவணப்படங்களை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக, கடந்த வாரம் வெளியான ரைசிங் பீனிக்ஸ் என்ற ஆவணப்படத்தில் அவர் தோன்றியுள்ளார்.