பிரபல ஐடி நிறுவனத்தில் புதிதாக 12,000 பேருக்கு வேலை ! இளைஞர்கள் மகிழ்ச்சி

புதன், 2 செப்டம்பர் 2020 (16:19 IST)
உலகையே உலுக்கு எடுத்து வரும் கொரொனா வைரஸால் உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் பலபேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, சில வேலைகளையும் தொழிலையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில்  இன்போஸிஸ்  கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 10000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிக்கை விடுத்தது. ஆனால் அதைவிட அதிகமாக சுமார் 12 000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது அமெரிக்காவில் உள்ள இண்டியானா,  வடகரோலினா, கனெக்டிகட், ராஷ்டி ஐஸ்லாந்து ஆகிய பகுதிகளிலும் டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட நகரக்களிலும் புதிதாக தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை இன்போஷிஸ் நிறுவனம் நிறுவியுள்ளது. எனவே இங்கு அமெரிக்கர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்