'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்சந்திப்பு!!

J.Durai

வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (18:25 IST)
ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில்,  ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'.
 
இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக  விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வினில் பேசிய நடிகை மிருதலா சுரேஷ்......
 
எனக்கு இதுதான் முதல் படம், எனக்கு இந்தப் படம் கிடைத்தது வரம், பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இயக்குநர் எனக்கு இது முதல் படம் என தெரிந்து கொண்டு பொறுமையாக சொல்லித்தந்து இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தார்.  படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள் நன்றி. 
 
நடிகை சினிசிவராஜ் பேசியதாவது.....
 
எனக்கு கொஞ்சம் புது அனுபவமாக இருந்தது, முதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன், பரத் சாருக்கு மிகவும் நன்றி, எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார்.  இயக்குநர் எனக்கு ஒரு கைடாக இருந்தார், பொறுமையாக இருந்து என்னிடம் வேலை வாங்கினர் , இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. அதற்கு ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி, உங்கள் ஆதரவை  இந்த படத்திற்கு கொடுங்கள்.
 
தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் பேசியதாவது…..
 
இப்படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்துள்ளோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 
 
நடிகை பவித்ரா லக்ஷ்மி பேசியதாவது....
 
இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தயாரிப்பாளருக்கும் நன்றி, இந்தப் படத்தின் கதை தாண்டி,படத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்தது. ஒரு பெரிய நடிகருக்கு கொடுத்த அதே மரியாதையை அனைத்து நடிகரிடமும் காட்டினார்கள். இயக்குநருக்கு வாழ்த்துகள், இந்தப் படத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம்.பெரிய பயிற்சி கிடைத்தது, ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி, பரத் சாருக்கும் அபிராமி மேமுக்கும் நன்றி, இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
 
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் பேசியதாவது......
 
இந்தப் படம் நடுநிலையை பற்றி பேசியுள்ளது, இயக்குநர் கதையை சொன்னதும், இது தான் எனக்கு தோன்றியது.  அருண் சாருக்கு நன்றி இந்தப் படம் உருவாக முக்கிய காரணம், அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், என் தம்பி ஜோஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன், பாட்டு அருமையாக வந்துள்ளது. படம் சிறந்த படைப்பாக வந்துள்ளது.  கண்டிப்பாக நல்ல படங்களை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள், அதே போல் இந்தப் படத்தையும் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும் நன்றி.
 
இயக்குநர் பிரசாத் முருகன் பேசியதாவது.....
 
முதலில் இந்தக் கதையை கேட்டதும் அதற்கு ஆதரவு கொடுத்தது ஆனந்த் சார் அன்றிலிருந்து இன்று வரை என் மீது நம்பிக்கை வைத்தார்கள்.பரத் சார், அபிராமி மேடம் என அனைவரும் பெரிய நடிகர்கள், என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும், ஒரு ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம் சுவாரஸ்யமான படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.
 
நடிகை அபிராமி பேசியதாவது.....
 
எங்கள் படக்குழு அனைவருக்கும் பெரிய வாழ்த்துகள், இப்போது தான் நான் இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்தேன், எங்கள் குழு மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்துள்ளது. ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மளை பயணிக்க வைக்கும், அது போன்ற படம் தான் இது. இயக்குநர் என்னிடம் கதையை சொல்லும்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தார், மிகவும் தெளிவாக இருந்தார் , இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார்.   படம் சிறப்பாக வந்துள்ளது, எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும் நன்றி.
 
நடிகர் பரத் பேசியதாவது.......
 
எனக்கு மிச்சம் வைக்காமல், அனைவரும் அனைத்தையும் பேசிவிட்டனர், என்ன பேசுவது என்று தெரியவில்லை, இந்தப் படத்தில் நான் கதையின் நாயகனாக நடித்துள்ளேன், கடந்த ஐந்து ஆறு வருடங்களில், தமிழ் சினிமா வேறொரு இடத்திற்கு சென்று விட்டது. அதே போல தான் இந்தப் படமும் இருக்கும். எனக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம் , நான் மொத்த கதையையும் கேட்கவில்லை, அவர் சொன்ன சிறு நேரத்திலே, எனக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. அதை நம்பித்தான் இந்த படத்தில் நடித்தேன். அதை சரியாக செய்தும் காட்டி விட்டார். படம் பார்த்தேன் நன்றாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், முழு ஈடுபாட்டைக் கொடுத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது, படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள், கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வெற்றி கிடைக்கும். இப்படம் ரசிகர்களை கண்டிப்பாக சுவாரசியப்படுத்தும். உங்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றம் கிடைக்காது, படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் கொடுங்கள் நன்றி என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்