பரத்துக்கு தாத்தாவாக நடித்த பிரேம்ஜி

திங்கள், 23 அக்டோபர் 2017 (14:19 IST)
பரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தில், அவருக்கு தாத்தாவாக பிரேம்ஜி நடித்துள்ளார்.


 


அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் ‘சிம்பா’. டார்க் காமெடிப் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. ஸ்வாதி தீக்ஷித், பானுஸ்ரீ மெஹ்ரா இருவரும் ஹீரோயினாக நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில், பரத்துக்கு தாத்தாவாக பிரேம்ஜி நடித்துள்ளார். பிரேம்ஜியின் அப்பாவான கங்கை அமரன் கெட்டப்பில் அவர் நடித்துள்ளார். இதற்காக பெரிய தாடி வளர்த்து நடித்துள்ளார் பிரேம்ஜி. இந்தப் படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்