இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்துக்காக மணிரத்னம் ஒரு புராணத்தொடரை உருவாக்க இருக்கிறார். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
இந்த கதைகளில் ஒன்றில் நடிகர் சூர்யா நடிக்க, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். அந்த பகுதிகளின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராம் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்தில் சில நாட்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தை பற்றிய மேலும் ஒரு தகவலாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பிசாசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த பிரயாகா மார்ட்டின் தான் இந்த படத்தில் கதாநாயகியாம்.