இந்நிலையில் பிரியதர்ஷனின் உதவியாளரும், ஜோடி, ரட்சகன் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன்காந்த் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னிடம் ரட்சகன் படத்தில் உதவியாளராக சேர்ந்தவர்தான் முருகதாஸ். எனது மற்றொரு உதவியாளர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியுடன், அஜீத்திற்கு கதை சொல்லி, நான் இயக்க வேண்டிய படத்தை தட்டி பறித்தீர்கள். என்னுடைய உதவியாளர்தானே இயக்குகிறார் என நானும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தேன். அது எனக்கு எனது குருநாதர் பிரியதர்ஷன் சொல்லிக் கொடுத்தது. அதேபோல், தினா படத்தில் அஜீத்திற்கு ‘தல’ எனற பட்டம் கொடுத்தீர்கள். அது என்னுடைய மற்றொரு உதவியாளர் மோகன் கூறிய விஷயம். ஆனால், இன்றுவரை நீங்கள்தான் அந்த பெயரை வைத்ததாக கூறப்பட்டு வருகிறது. நீங்கள் இயக்கிய ரமணா, கஜினி, கத்தி ஆகிய படங்களின் கதை யாருடையது என எல்லோருக்கும் தெரியும்.