படத்தின் நாயகி காஜல் அகர்வால் என்கிறார்கள். ஆனால் இதுவரை அவர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அதேபோல் வில்லன் யார் என்பதிலும் குழப்பம். பிரசன்னா வில்லனாக நடிப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் அரவிந்த்சாமியை வில்லனாக்கவும் முயற்சிகள் நடப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.