ஆனால் இப்பொது கொரோனா பெருந்தொற்று காரணமாக ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரத்த வங்கிகளில் தேவையான ரத்தவகைகள் கிடைப்பதில் மிகப் பெரிய அளவில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனை முன்னிட்டு மீண்டும் ரத்த தானம் அளிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சென்னை திருவான்மியூர் ரோட்டரி கிளப் மற்றும் வி ஹெச் எஸ் பிளட் பேங்க் ஆகியவை இணைந்து சென்னை பெருந்துறையில் அமைந்துள்ள பொல்லினேனி ஹில்ஸைட்- ல் ரத்த தான முகாமை பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்துகின்றனர். இதில் பெருவாரியான தன்னார்வலர்கள் வந்து கலந்துகொண்டு ரத்த தானம் அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.