பிரபாஸ் பிறந்த நாள்: ராம அவதாரத்தில் வெளியான ஆதிபுருஷ் போஸ்டர்!

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (12:13 IST)
பிரபாஸ் பிறந்த நாள்: ராம அவதாரத்தில் வெளியான ஆதிபுருஷ் போஸ்டர்!
தெலுங்கு நடிகர் பிரபாஸ் பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பிரபாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் அவர் நடித்து வரும் ஆதிபுருஷ் என்ற படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் 
 
இந்த போஸ்டரில் ராமாயண காவியத்தின் நாயகனான ராமபிரானின் கெட்டப்பில் பிரபாஸ் உள்ளார் என்பதும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகர் பிரபாஸ் ராமாவதார உருவப்படம் தெய்வீகம் ததும்பும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்