இணையத்தில் லீக் ஆகிய பாகுபலி' பிரபாஸின் ரகசியம்

வியாழன், 15 ஜூன் 2017 (04:40 IST)
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஆதார் அட்டை வாங்க வேண்டும் என்றும், ஆதார் அட்டை இருந்தால்தான் இனி ரோட்டில்கூட நடக்க முடியும் என்ற நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.



 


ஆனால் அதே நேரத்தில் பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படும் நமது ஆதார் விபரங்களின் ரகசியம் காக்கப்படுமா? என்பது குறித்து உறுதிமொழி மத்திய மாநில அரசுகளிடம் இருந்து இதுவரை வெளிவரவில்லை

இந்த நிலையில் பாகுபலி நாயகன் பிரபாசின் ஆதா அட்டை விபரங்கள் இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது. இதை லீக் செய்தவர் யார் என்று தெரியவில்லை. மேலும் வழக்கம்போல் பிரபாசின் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படமும் அவர் பிரபாஸ்தானா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளதால் பலர் இதுகுறித்து கலாய்த்து வருகின்றானர்.

வெப்துனியாவைப் படிக்கவும்