அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகை காக்னி லின் கார்டர் என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்தார், அதன் பிறகு சர்வதேச அளவில் பிரபலமான நிலையில் ஒரு கட்டத்தில் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
அதன் பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதிலிருந்து தப்பிக்க ஆபாச படத்துறையில் இருந்து விலகி நடனத்தை கற்று வந்ததாகவும் அவர் ஒரு நடன கலைஞராக மாற வேண்டும் என்று தீவிர முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு காக்னி லின் கார்டர் நடனத்தில் மிகச்சிறந்தவராக விளங்கிக் கொண்டிருந்த நிலையில் அதன் பின்னர் சமூக பணிகளில் ஈடுபட்டு கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை காக்னி லின் கார்டர் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில் தான் நேற்று திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். நடிகை காக்னி லின் கார்டர் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.