பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

செவ்வாய், 25 ஜூலை 2017 (11:33 IST)
கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம் சுயம்வரம் திரைப்பட இயக்குநர் சிராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் என்ன பெத்த ராசா, ஊரெல்லாம் உன்பாட்டு, என் ராஜாங்கம் போன்ற படங்களை இயக்கியவர்.

 
சேத்துபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிராஜிற்கு ஆயிஷா என்ற மனைவியும் 3  மகள்களும் உள்ளனர். அவருக்கு வயது 65.
 
இயக்குனர் சிராஜ் அவர்களின் உடல் அடக்கம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த செய்தி அறிந்து திரைத்துறையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்