தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.
எந்தவித தடையுமின்றி மாடர்ன் உடையில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வந்த அம்மணி தற்போது சிம்பிள் லுக்கில் அழகிய போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார். பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், வரவில்லை அடுத்தமுறையாவது கண்டிப்பாக பிக்பாஸில் கலந்துகொள்ளவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.