இளையராஜாவை மிஸ் செய்கிறேனா?... இயக்குனர் மணிரத்னம் பகிர்ந்த தகவல்!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (13:36 IST)
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து இப்போது ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம் “எங்கு சென்றாலும், இளையராஜா இசையை மிஸ் செய்கிறீர்களா என்று கேட்கிறார்கள். அவர் ஒரு ஜீனியஸ். நான் அவர் இசையைக் கேட்டுதான் வளர்ந்தேன். எத்தனை படம் எடுத்தாலும், அவரை மிஸ் பண்ணாமல் இருக்க முடியாது.” என பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்