இந்த நாவலைப் படமாக்க தமிழ் சினிமா ஆளுமைகளில் பலர் முயன்று தோற்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இதைப் படமாக்க முயன்று இரண்டு முறைத் தோற்றுள்ளார். தான் பிரபலக் கதாநாயகனாக இருந்த போது ஒருமுறை இந்த படத்திற்கான வேலைகளைத் தொடங்கி போஸ்டர் எல்லாம் கூட வெளியிட்டார். ஆனால் என்ன காரணத்தினாலோ படம் தொடங்கவில்லை, அதன் பின்னர் தான் முதல்வரானப் பின்பு கமல்ஹாசனை கதாநாயகனாக நடிக்க வைத்து தான் ஒருக் குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிக்க முடுவு செய்தார். ஆனால் அந்த எண்ணமும் நிறைவேறவில்லை.
அதையடுத்து இப்போது மணிரத்னம் பொன்னியின் செல்வனைப் படமாக்கும் முயற்சியில் இறங்கி அதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் இறங்கியுள்ளார். இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ஐஸ்வர்யா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இப்போது இவர்களில் யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.