அரசியல் காட்சியும், நயன் ரொமான்ஸ் காட்சியும் நீக்கம்: பிகில் குறித்து எடிட்டர்

புதன், 23 அக்டோபர் 2019 (21:01 IST)
விஜய் நடித்த பிகில் படத்தில் அரசியல் காட்சி ஒன்றும் நயன்தாராவின் ரொமான்ஸ் காட்சி ஒன்றும் நீக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் எடிட்டர் ரூபன் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் 
 
பிகில் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த படத்தில் இரண்டு முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார் 
 
அதில் ஒரு காட்சியாக ’ஒரு அரசியல்வாதி ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பார், அப்போது அங்கு வரும் விஜய், அந்த அரசியல்வாதியை கலாய்த்து மக்கள் வாங்கிய பணத்தை அவரிடமே திரும்பி வாங்கிக் கொடுப்பார். இந்த காட்சியை நீக்கி விட்டதாகவும் ரூபன் கூறியுள்ளார் 
 
அதேபோல் விஜய்-நயன்தாரா காதல் காட்சி ஒன்றையும் நீக்கப்பட்டதாகவும், விஜய் காமெடியுடன் ரொமான்ஸ் செய்த இந்த காட்சி அசத்தலாக இருந்தாலும், இயக்குனர் கூறியதால் அந்த காட்சியும் நீக்கிவிட்டதாக நீக்கப்பட்டுள்ளதாக எடிட்டர் ரூபன் கூறியுள்ளார் 
 
ஆனாலும் இந்த காட்சிகள் படம் வெளியான ஒரு சில மாதங்களுக்கு பின் நீக்கப்பட்ட காட்சிகள் என தனியாக சமூகவலைதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்