சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திய தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் மீதும் வரிசையாக பாலியல் புகார் கூறினார் ஸ்ரீ ரெட்டி. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சுந்தர்.சி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார்.
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடனேயே தயாரிப்பாளர் வீட்டிற்கு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கே அவர் தான் மாதாமாதம் வாடகை கட்டுகிறார் எனவும் தெரிய வந்தது. அப்படியிருக்க ஏன் ஸ்ரீடெட்டி இப்படி செய்தார் என தெரியவில்லை. இதையடுத்து போலீஸார் போலியாக புகார் கொடுத்த ஸ்ரீரெட்டியை எச்சரித்து அனுப்பினர்.