லண்டனில் இருந்து வந்த ஒளிப்பதிவாளர்… மிஷ்கினின் பிசாசு 2 அப்டேட்!

சனி, 13 பிப்ரவரி 2021 (10:41 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக லண்டனைச் சேர்ந்த சிவசாந்தகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இப்போது லண்டனைச் சேர்ந்த சிவசாந்தகுமார் என்ற நபர் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவர் லண்டனில் துப்பறிவாளன்  2 திரைப்படத்தை மிஷ்கின் இயக்கிக் கொண்டிருந்த போது அவருக்கு உதவிகள் செய்தவராம். அப்போது அவரைத் திறமையைப் பார்த்து வியந்த மிஷ்கின் பிசாசு 2 படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்