விஜய்க்காக தான் இந்த கதையை எழுதினேன்: மிஷ்கினின் பழைய பேட்டி வைரல்!

புதன், 13 ஜனவரி 2021 (20:27 IST)
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ஒருபக்கம் பெற்றிருந்தாலும் இந்த படத்திற்கு நடுநிலை ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களையே தந்து கொண்டிருக்கின்றனர்
 
மாநகரம் மற்றும் கைதி படத்தில் இருந்த திரைக்கதையில் விறுவிறுப்பு இந்த படத்தில் இல்லை என்றும் 2 மாஸ் நடிகர்களுக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் சிக்கி சின்னாபின்னம் ஆகி விட்டார் என்றும் கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் மிஸ்கினின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படமான சித்திரம் பேசுதடி என்ற படத்தின் ஹீரோ கேரக்டர் ஆன திரு என்ற கேரக்டரை நான் விஜய்யை மனதில் வைத்துதான் எழுதினேன் என்றும் இதை விஜய் இடமே நான் கூறினேன் என்று கூறினார் 
 
அப்போது விஜய் ஏன் என்னிடம் நீங்கள் இந்த கதையை சொல்ல வில்லை என்று கேட்டபோது இந்த கதையை நான் உங்களுக்கு சொல்லி இருந்தால் உங்கள் அப்பா ஒரு பதினெட்டு சீன் மாத்திருப்பார் நீங்கள் ஒரு பதினெட்டு சீன்களை மாத்திருப்பார், மொத்தத்தில் நான் தற்கொலை செய்திருப்பேன் அதனால்தான் இந்த படத்தின் கதையை நான் உங்களிடம் சொல்ல வில்லை ஆனால் இந்த கதையை உங்களுக்காக தான் எழுதினேன் என்று கூறியுள்ளார்
 
மாஸ்டர் படத்தின் திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் பாணியிலேயே விட்டு இருந்தால் அந்த படம் சூப்பராக இருந்திருக்கும் என்றும் இந்த படத்தின் 2 மாஸ் நடிகர்களால் தான் இந்த படத்தின் திரைக்கதையை திசைதிரும்பி உள்ளதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் மிஷ்கினின் இந்த பழைய பேட்டி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்