விடாப்பிடியாக தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பிக்பாஸ் ஜூலி

செவ்வாய், 31 அக்டோபர் 2017 (10:06 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய பெண் என்ற பெற்றவர் ஜூலி. விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய ‘பிக்  பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் மக்களின் ஆதரவை பெற்றாலும் நாளடைவில் போலி ஜூலி என்ற பெயரை  பெயரைப் பெற்றார்.

 
பிக்பாஸ் வீட்டில் பொய் பேசியதாலும் போலியான நடவடிக்கையாலும் அவரை யாருக்கும் பிடிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் விஜே ஆகவேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என தெரிவித்திருந்தார் ஜூலி.
 
இந்நிலையில் தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் 6 வது சீசனை  தொகுத்து வழங்குகிறார் ஜூலி. கலா மாஸ்டர் மற்றும் கோகுல் நடுவராக பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அவரது ஆசை நிறைவேறியதற்கு வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்