இவருடன் ஒரு நாள் முழுவதும் இருக்க ஆசை: ஓவியா ஓபன் டாக்

திங்கள், 16 அக்டோபர் 2017 (13:06 IST)
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமனவர் ஓவியா. திரையுலகில் கூட கிடைக்காத ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின்போது காயத்ரி, ஜூலி ஆகிய இருவரும் ஓவியாவை டார்கெட் செய்து வெளியேற்ற துடித்தது அனைவரும் அறிந்ததே. மன அழுத்தத்தில் ஓவியா பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்தவரும் காயத்ரிதான்.



 


இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியின்போது ஓவியாவிடம், காயத்ரி மற்றும் ஜூலி ஆகிய இருவரில் யாருடன் ஒரு நாள் முழுக்க தங்க விருப்பம் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓவியா, காயத்ரியுடன் ஒரு நாள் முழுக்க தங்க விருப்பம் என்றும்,காரணம் அவர் என்னை நன்றாக கவனித்துக் கொள்வார் என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்