இந்த நிலையில், கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஹசீனா பேகம் தன் கணவரை விட்டுப் பிரிந்து, நெல்லை டவுனில் முகமது அலி தெருவில் உள்ள தன் தாயார் பாத்திமா பேகம் வீட்டிற்குக் குழந்தைகளுடன் சென்றார்.
நேற்று மதியம் இம்ரான் கான் தன் மனைவியைப் பார்ப்பதற்காக டவுனுக்குச் சென்றார். அங்கு மாமியார் வீட்டிற்குச் சென்று தன் மனைவியுடன் பேசிவிட்டு சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர், தொழுகை நடத்த செல்வோம் என்று மனைவியிம் கூறினார் இம்ரான்கான்.
இருவரும் சேர்ந்து தர்காவுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். அப்போது, தான் மறைத்திருந்த கத்தியை எடுத்து, ஹசீனாவின் வயிற்றில் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இம்ரான் கான் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.