உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி சொன்ன பவன்கல்யாண்

திங்கள், 30 மார்ச் 2020 (18:22 IST)
உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி சொன்ன பவன்கல்யாண்
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகாகுளம் என்ற பகுதி மீனவர்கள் 99 பேர் திடீரென் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு உறைவிடம் வழங்க வேண்டும் என்றும்  தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன்கல்யாண் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் பவன்கல்யாண் கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கபப்ட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு இது குறித்து அறிவித்து அந்த 99 மீனவர்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பவன்கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
மாண்புமிகு தமிழக முதல்வர்‌ எடபாடி கே பழனிசாமி அவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்‌கிறேன்‌. எனத முறையீட்டு விண்ணப்பத்தின்படி ஸ்ரீகாகுளம்‌ மாவட்டம்‌ சோமபேட்டா மண்டலத்தின்‌ கோலகண்டு கிராமத்திலிருந்து மீன்பிடிக்க தமிழக கடற்கரை எல்லைக்கு சென்ற சுமார்‌ தொண்ணூற்று ஒன்பது மீனவர்கள்‌, கோரோனா வைரஸ்‌ பாதுகாப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில்‌ சிக்கி தவித்தவர்களுக்கு உடனம மீட்பு நிவாரணப்‌ பணிகளை மேற்கொண்டுள்ளார்‌.
 
முதல்வர்‌ தனது அதிகாரிகளுக்கு அளித்த உத்தரவின்‌ பேரில்‌ அவர்களுக்கு தங்கும்‌ வசதி மற்றும்‌ உணவு பொருள்கள்‌ அளித்து உள்ளனர்‌ என்பது தெரியவந்தது, எனக்கு மிகவும்‌ மகழ்ச்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சியின்‌ அதிகாரிகளின்‌ இந்த உடனடி மீட்பு பணியில்‌ களயிறங்கியதை அறியும்‌ போது எனக்கு மிகவும்‌ நெகிழ்ச்சியாகவும்‌ பெருமையாகவும்‌ உள்ளது. மற்றும்‌ எனது ஜனசேனா தொண்டர்கள்‌ தகுந்த நேரத்தில்‌ இந்த மீனவர்களை காப்பாற்றக்‌ கோரியதும்‌ அதற்குறிய நடவடிக்கை எடுக்ககோரி வேண்டியதும்‌, அவர்கள்‌ குடும்பத்தாருக்கு ஆறுதல்‌ அளிக்கும்‌ விதமாக அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டதும்‌ மிகவும்‌ பாராட்டத்தக்கது. இவ்வாறு பவன்கல்யாண் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்