"பட்டாஸ்" பட புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்!

வெள்ளி, 10 ஜனவரி 2020 (14:20 IST)
தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது "பட்டாஸ் " படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
 
தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.
 
இப்படத்தை வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தற்போது ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. இது குறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் " படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும்  ஜனவரி 15ஆம் தேதி தை பொங்கல் அன்று "பட்டாஸ்" உலகம் முழுக்க ரிலீசாகும் என்றும் அறிவித்துள்ளார். 

#pattas censored with “U” .. #jan15 worldwide release pic.twitter.com/6mieWcvePA

— Dhanush (@dhanushkraja) January 10, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்