தனுஷ் ரசிகர்களுக்கு கலைப்புலி தாணு விடுத்த வேண்டுகோள்!

வியாழன், 9 ஜனவரி 2020 (21:11 IST)
நடிகர் தனுஷ் நடித்த ‘பட்டாஸ் திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படம் போலவே ஒரு சமூக கருத்தை ஆழமாக சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் நெல்லையில் படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தனுஷ் ரசிகர்கள் சிலர் படப்பிடிப்பை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
 
இந்த நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கர்ணன் படப்பிடிப்புதள புகைப்படங்களை நீக்குமாறு தம்பி தனுஷ் ரசிகர்களுக்கும் சினிமா விரும்பிகளுக்கும் வேண்டுகோள்விடுக்கிறேன். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்