தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.
வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது இதில் சொந்த மண்ணிற்காக ஒரு வர்மக்கலை வீரனாக அப்பா தனுஷ் போராடுவது போன்றும் , மகன் கிக் பாக்ஸர் போன்றும் கதை வடிவமைத்துள்ளனர். இந்த கோணத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் பார்த்து நம் கண்கள் பழகியிருந்தாலும் பட்டாஸ் படம் காதல் , தந்தை மகன் பாசம் , சொந்த மண்ணிற்கான போராட்டம், வர்மக்கலை, கிக் பாக்சிங் உள்ளிட்ட பல அம்சங்ககள் உள்ளடக்கி உருவாகியுள்ளதால் ரசிகர் படம் பார்க்கும் போது நிச்சயம் ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.