இந்த நிலையில் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்று '90ml'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'பீர் பிரியாணி' என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்த நடிகர் சிம்பு, இன்று இந்த பாடலை இணையதளங்களில் வெளியிடுகிறார்.
ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அனிதா உதீப் இயக்கி வருகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் 2019ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிகிறது