ஜீ.வி.பிரகாஷ் படத்துக்கு ஒரு சின்ன வியாபாரம் இருக்கிறது. அதுபோல் ராஜேஷ் எம். இயக்கும் படங்களுக்கும்.
டாஸ்மாக் ப்ரியர்கள் இவர் படத்தை விரும்பி பார்க்கின்றனர். அவரது சமீபத்திய படங்கள் தோல்வி என்றாலும் எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது.
எப்படி இவ்வளவு தீர்மானமாக சொல்கிறோம் என்றால், ஜீ.வி.பிரகாஷை வைத்து ராஜேஷ் இயக்கிவரும் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை பெரும் தொகைக்கு சேலம் சிவா வாங்கியுள்ளார். இத்தனைக்கும் படம் இன்னும் முடியவில்லை.
படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தையும் படமாக்கிவிட்டனர். டாக்கி போர்ஷனில் இன்னும் சில எடுக்கப்பட உள்ளன. படப்பிடிப்பு முடியாத நிலையிலேயே படம் அதிக விலைக்கு விற்பனையானது பட யூனிட்டை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்