ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஹிந்தியில் அறிமுகம்
வியாழன், 1 ஜூன் 2017 (17:55 IST)
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் சிறு வயதிலேயே சிறப்பாக பாடும் திறமை பெற்றுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தின் மௌலா வா சலீம்' பாடலை பாடி தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து ‘நிர்மலா கான்வென்ட்’ எனும் தெலுங்கு படத்திலும் பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான கிரிக்கெட் ஜாம்பவானின் வாழ்க்கை வரலாற்று படமான 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.அமீன் ஹிந்தியில் அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மர்த் மராத்தா' எனும் பாடலை அஞ்சலி கேக்வாத் உடன் சேர்ந்து பாடியுள்ளார். இந்த தகவலை ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் வெளியாகி சில நாட்கள் கழித்து தெரிவித்துள்ளார்.