ஒரு கொம்பு கதை... சிகப்பு ரோஜாக்களின் ரீமேக்

திங்கள், 12 செப்டம்பர் 2016 (14:41 IST)
பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தை அவரது மகன் மனோஜ் கே.பாரதி ஒரு கொம்பு கதை என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்.


 
 
தாஜ்மஹாலில் நடிகராக அறிமுகமான மனோஜ் கே.பாரதி பிறகு உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தார். தற்போது படம் இயக்க தீர்மானித்துள்ளார். முதல் படமாக சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்கிறார்.
 
கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தப் படத்தின் ரீமேக்கில் மஹத் நடிக்கிறார். ஒரு கொம்பு கதை என படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்