பிக்பாஸ் முதல் வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டவர் இவரா? கண்ணீருடன் வழியனுப்பிய போட்டியாளர்கள்>.!

திங்கள், 9 அக்டோபர் 2023 (07:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் நேற்று முதல் எலிமினேஷன் நடந்தது. முதல் வாரம் அனன்யா ராவ் எலிமினேஷன் செய்யப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தவுடன் அனன்யா ராவ் அதிர்ச்சி அடைந்தார். அவர் கண்ணீருடன் தனது சக போட்டியாளர்களுடன் விடை பெற்று சென்றார்.

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அந்த போட்டியாளர்கள் குறித்து பார்வையாளர்கள் அறிந்து கொள்வதற்கு ஒரு வாரமாவது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

முதல் வாரமே ஒரு போட்டியாளர் சரியாக விளையாடவில்லை என்று வெளியே அனுப்பப்படுவது சரியல்ல என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த வாரம் நாமினேஷனில் ரவீனா, ஐஷு, பிரதீப் அந்தோணி, ஜோவிகா, பவா செல்லத்துரை, யுகேந்திரா மற்றும் அனன்யா ஆகிய ஏழு பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்