உட்தா பஞ்சாப் பட சர்ச்சை : உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திங்கள், 13 ஜூன் 2016 (18:38 IST)
உட்தா பஞ்சாப் திரைப்படத்தில் காட்சிகளை நீக்கவோ, மாற்றவோ தணிக்கை குழுவிற்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

 
இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கியுள்ள படம் உட்த பஞ்சாப். இந்த படம் பஞ்சாப் மாநிலத்தின் போதைப் பொருள் பிரச்சனயை மையமாக கொண்ட படமாகும். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 13 காட்சிகளை நீக்க வேண்டும் என்றனர். மேலும் தலைப்பில் உள்ள பஞ்சாப் என்ற வார்த்தைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த படத்தின் குழுவினர், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதிகள் “போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் எந்த காட்சியும் இந்த படத்தில் இல்லை. மேலும் இப்படம் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் இல்லை. 
 
திரைப்பட தணிக்கை வாரியம் சட்டத்தின் படியும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும் செயல்பட வேண்டும். படைப்பின் கருத்து தவறாக இல்லாத பட்சத்தில் அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. 
 
எனவே இந்த படத்தின் எந்த காட்சிகளையும் வெட்டவோ, நீக்கவோ தணிக்கை வாரியத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று தீர்ப்பளித்தனர்.
 
இதைத் தொடர்ந்து இந்த படம் விரைவில் வெளியாகயுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்