விக்ரம் படத்தால் தள்ளிப்போன பிரபல நடிகரின் படம்

செவ்வாய், 31 மே 2022 (09:40 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
தென்னிந்தியாவில் இந்த படத்திற்கான டிக்கெட் விற்பனை மிக மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் நிவின்பாலி நடித்த மலையாள திரைப்படம் துறைமுகம் என்ற படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது
 
 தற்போது விக்ரம் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்பட்டு வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் 
 
இதனால் விக்ரம் திரைப்படத்திற்கு 100 முதல் 200 திரையரங்குகள் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்