திருச்சிற்றம்பலம் ஆடியோ ரிலீஸுக்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்!

ஞாயிறு, 31 ஜூலை 2022 (08:52 IST)
நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்த நிலையில் படத்தின் நாயகிகளுள் ஒருவரான நித்யா மேனன் நிகழ்ச்சிக்கு சக்கர நாற்காலியில் வந்தார். சில நாட்களுக்கு முன்னர் அவர் கணுக்காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்ததால் அவரால் நடக்க முடியாது என்பதால் சக்கர நாற்காலியில் வந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்