மீண்டும் இணையும் நானே வருவேன் கூட்டணி… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

ஞாயிறு, 31 ஜூலை 2022 (08:46 IST)
நானே வருவேன் படத்தின் மூலம் முதல் முதலாக செல்வராகவன் – தாணு கூட்டணி இணைந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் தாணு மற்றும் செல்வராகவன் ஒரு படத்துக்காக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக ஒரு மேடையிலேயே தாணு செல்வராகவனிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்த படத்திலும் தனுஷே கதாநாயகனாக நடிப்பாரா அல்லது வேறு யாரேனும் நடிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்