நிதி அகர்வாலுக்கு விரைவில் டும் டும் டும்… கைப்பிடிக்கப் போகிறவர் ஒரு ஹீரோதானாம்!

வியாழன், 30 டிசம்பர் 2021 (15:58 IST)
சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால்.

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிதி தனது வரிசையான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது நிதி அகர்வால் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக சொல்லப்படுகிறது. ஒரு கதாநாயக நடிகரோடு காதலில் இருக்கும் இவர் விரைவில் அவரைக் கரம்பிடிக்க உள்ளாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்