சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். நிலானி, காந்தி லலித்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மயிலாப்பூரில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய காதலர் காந்தி லலித்குமார், நிலானியிடம் திருமணம் குறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டாராம்.
இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸிடம், காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.