NGK: டீசரை கொண்டாடி தீர்ப்பதற்குள் அடுத்த அப்டேட்ஸ் வந்தது !

வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:48 IST)
சூர்யாவின் NGK படத்தின் அடுத்த அப்டேட்ஸ் வந்து ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 
ஒரே நாளில் சூர்யாவின் NGK படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்ஸ் வெளிவந்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.  
 
தமிழ் சினிமாவின் ஜீனியஸ் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் நடிகர் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
ட்ரீம் வாரியர்ஸ் பிச்சர்  சார்பாக எஸ்.ஆர் .பிரபு  தயாரித்துள்ள இப்படத்தின்  டீசர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இந்த டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா  இன்ஸ்டாகிராம் லைவ்வில்  கலந்துரையாடியுள்ளார். அதில் அவர் கூறியதாவது , NGK டீசருக்கு கிடைத்த வரவேற்பு தனக்கும் இயக்குனர் செல்வாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. மீண்டும் அடுத்த படத்தின் பின்னணி இசைக்கான வேலை தொடங்க உள்ளேன் என யுவன் தெரிவித்துள்ளார். 



 
இன்று டீசருடன் சேர்த்து யுவன் கொடுத்துள்ள இந்த அப்டேட்டால்  சூர்யா ரசிகர்கள் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்