இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டு ஓடிடி பக்கம் ஒதுங்கிய இயக்குனர்!

திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:25 IST)
ஒரு நாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக ஒரு வெப் சீரிஸை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.

தமிழில் இதுவரை இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். ஒரு நாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் என அவர் இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றிபடம்தான். அதிலும் மான்ஸ்டர் திரைப்படம் 18+ ரசிகர்களின் நடிகராக இருந்த எஸ் ஜே சூர்யா குழந்தைகளுக்கும் பிடித்த நடிகராக்கியது.

இந்நிலையில் மான்ஸ்டர் படத்துக்குப் பின்னர் நெல்சன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வரவே இல்லை. இப்போது அவர் சைதை துரைசாமியின் மகன் தயாரிக்கும் ஒரு புதிய வெப் சீரிஸை இயக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்